பிரிவினைத் தடுப்பு சட்ட மசோதா! தனிநாடு திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட திமுக…!!
Editor Zhagaram
பிரிவினைத் தடுப்பு சட்ட மசோதா! தனிநாடு திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட திமுக…!!
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். பெரியார் என அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஜார்ஜ் டவுனில் கூடி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தைத் உருவாக்குவது என்று முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து மறுநாள் செப்டம்பர் 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அந்த கட்சியின் முதல் பொதுச் செயலாளராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கருப்பு-சிவப்பு வண்ணம் கொண்ட கொடி திமுகவின் கோடியாக தேர்வு செய்யப்பட்டது. 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் திமுக பங்கேற்கவில்லை என திமுக கட்சி அறிவிப்பு வெளியிட்டது, இருப்பினும் ஆந்திரம், கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்கள் உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக திமுக அறிவித்தது.
1953 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டால்மியாபுரம் பெயரை கல்லக்குடி என பெயர் மாற்றக் கோரி போராட்டம். தமிழ்நாட்டு மக்களை Nonsense என்று நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் ஆகிய போராட்டங்களை நடத்தியது.
1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக 2-வது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து, தனித்து இயங்கும் இதன் உரிமையை தானே பெற்றிருக்க அரசியலமைப்பு திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்த தேர்தலில் திமுக கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வெற்றி கண்டது, 1958ஆம் ஆண்டு திமுக மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு உதயசூரியன் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது.
1959 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 90 இடங்களில் வென்ற திமுக முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது. 1961ஆம் ஆண்டில் அந்த கட்சியில் இருந்து ஈ.வே.கி சம்பத் வெளியேறி தமிழ்த்தேசிய கட்சியை உருவாக்கினார் இது திமுகவில் ஏற்பட்ட முதல் பிழவு!
1962 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திராவிடநாடு விடுதலைக் கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்தது திமுக. இராஜாஜியின் சுதந்திரா கட்சி, முஸ்லிம் லீக் ஆகியவற்றின் இணைந்து போட்டியிட திமுக 50 இடங்களில் வெற்றி பெற்றது இருப்பினும் திமுக பொதுச்செயலாளர் அண்ணாதுரை, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார்.
1963ஆம் ஆண்டு பிரிவினை பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் பிரிவினை தடுப்பு சட்ட மசோதாவை இந்திய ஒன்றிய அரசு அறிவித்தது.
அதை அடுத்து நவம்பர் 3 1963 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக கட்சியின் முக்கிய கொள்கையான தனிநாடு திராவிட நாடு கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தது திமுக…!!