தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு மொத்தம் 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இந்த பரிசுத் தொகுப்பில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு மற்றும் மஞ்சள் துணிப்பை வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 2,15,48,060 குடும்பங்களுக்கு இப்பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
கொரோனா பரவல் காலம் என்பதால் ரேஷன் கடைகளில் கூட்டம் ஏற்படாத வகையில் டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் டோக்கன்கள் அடிப்படையில் இப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.