செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை வைது செய்ய முயன்றபோது அவர்கள் காவல்துறையினரை தாக்கியதால், தற்காப்பிற்காக அவர்களை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நகர காவல்நிலையம் எதிரில் உள்ள டீக்கடையில் கே.தெரு பகுதியை சேர்ந்த அப்பு கார்த்திக் என்பவரை, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பியது.
அதே கும்பல் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் என்பவரை அவரது வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த போதே சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தலைமறைவானது.
இருவரின் உடல்களையும் மீட்ட செங்கல்பட்டு நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய தினேஷ், மாதவன், மைதீன் ஆகியோரை பிடிக்க போலீசார் முயன்ற போது காவல்துறையினரை தாக்க முயன்றதால் அவர்களை தற்காப்பிற்கா காவல்துறையிர் சுட்டுக் கொன்றனர்.