Site icon ழகரம்

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…..!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அவர் வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அவரின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், மருமகள் வைஸ்னவி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.பி. அன்பழகன் 2016-21 ல் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது வருவாய்க்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும், தெலுங்கானாவிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கே.பி.அன்பழகனின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Exit mobile version