அரசியல்தமிழ்நாடு

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீட்டிலேயே பூஸ்டர் தடுப்பூசி….!

60 வயதுக்கு மேற்பட்டோர் மாநகராட்சியை தொடர்புகொண்டால் வீடு தேடி சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் :

“இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மாநகராட்சியின் சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இணைநோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் 1913, 044- 2538 4520 மற்றும் 044- 4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்தால், அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

மேலும், 60 வயதைக் கடந்த முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டிய நாட்களைக் கடந்த நபர்களும் இந்த எண்களில் தொடர்புக் கொண்டு பதிவு செய்தால், அவர்களுக்கும் இல்லங்களிலேயே கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button