பூஸ்டர் தடுப்பூசிகளால் பயனில்லை – WHO
ஓமைக்ரான் உட்பட உருவாகி வரும் புதிய வகை கொரோனா வேரியண்ட்களுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் பலனளிக்காது என உலக சுகாதார அமைப்பின் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதில் டெல்டா, ஓமைக்ரான் போன்ற உருமாற்றம் அடைந்த வேரியண்ட்களால் அலை அலையாக நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு வருகிறது. இதற்காக இரண்டு டோஸ் தடுப்பூசிகளுடன் சேர்த்து கூடுதலாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டில் இருந்துவரும் தடுப்பூசிகளை மதிப்பிடுவதற்காக 18 வல்லுநர்கள் அடங்கிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை (TAG-Co-VAC) உலக சுகாதார அமைப்பு அமைத்திருந்தது. இந்த குழு தற்போது கொரோனா தடுப்பூசிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கோவிட் நோயைத் தடுப்பதில் தற்போதுள்ள தடுப்பூசிகள் குறைவான செயல்திறன் கொண்டவை என்று ஆரம்பகட்ட தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.
வைரஸின் பரிணாம வளர்ச்சியிலிருந்து பாதுகாக்க தற்போதைய கோவிட்-19 தடுப்பூசிகளின் கலவை புதுப்பிக்கப்பட வேண்டியிருக்கும். இத்தகைய புதுப்பிப்புகள் மரபணு ரீதியாகவும் ஆன்டிஜெனிகல் ரீதியாகவும் சுற்றும் மாறுபாடுகளுக்கு நெருக்கமாக இருக்கும் விகாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
அத்தகைய தடுப்பூசிகள் கிடைக்கும் வரை, மற்றும் SARS-CoV-2 வைரஸ் உருவாகும் வரை, தற்போதைய கோவிட்-19 தடுப்பூசிகளின் கலவை புதுப்பிக்கப்பட வேண்டியிருக்கும். அவை ஓமைக்ரான் மற்றும் எதிர்கால மாறுபாடுகள் உட்பட தொற்று மற்றும் நோய்களுக்கு எதிராக WHO பரிந்துரைத்த அளவிலான பாதுகாப்பை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.