திராவிடம் என்பது இனமல்ல! ‘தமிழ்மொழி’ இமயம் முதல் குமரி வரை பேசிய ஒரே மொழி என்கிறார் அண்ணல் அம்பேத்கர். Ambedkar about Tamil.
Editor Zhagaram
திராவிடம் என்பது இனமல்ல, தமிழ் மொழி இமயம் முதல் குமரி வரை பேசிய ஒரே மொழி என்கிறார் அண்ணல் அம்பேத்கர்!
ஆரியர்களின் வருகைக்கு முன்பு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மக்களும் ஒரே மொழி தான் பேசியிருப்பார்கள். ஆரியர்களின் வருகைக்குப் பின்பு சமஸ்கிருதம் கலந்து வட இந்திய மொழிகள் தோன்றியுள்ளன என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.
அண்ணல் அம்பேத்கர் நூல் தொகுதி 7:
தமிழ் என்ற சொல் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு தமிதா என்றும், தமிளா என்றும் உருமாறி, பிறகு திராவிடமாகி விட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது. அது அம்மக்களின் இனத்தைக் குறிக்கவில்லை.
தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டும் அல்ல, ஆரியர்கள் வருமுன் தமிழ்மொழி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பேசப்பட்ட மொழியாகும். தமிழ் – காஷ்மீரத்தில் இருந்து குமரிவரையில் பேசப்பட்ட மொழி.
இது உண்மையில் தமிழ் இந்தியா முழுவதும் நாகர்களால் பேசப்பட்ட மொழியாகும். ஆரியர்கள், நாகர்கள் மீதும் அவர்களின் மொழி மீதும் ஏற்படுத்திய தாக்கம் – வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியான தமிழைவிட்டு அதற்குப் பதிலாக சமஸ்கிருதத்துடன் கலந்தனர். தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள் ஆரியர்களின் சமஸ்கிருத மொழியை ஏற்கவில்லை.
அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களின் மூலம் திராவிடம் என்பது ஒரு இனமல்ல, சமஸ்கிருத திணிப்பு என்பதும். தமிழ் மொழி இமயம் முதல் குமரி வரை பரவியிருந்தது என்பதும் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் தமிழர்களின் நிலப்பரப்பாக இருந்தது என்பதும் தெரியவருகிறது.