Site icon ழகரம்

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு….!

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவதையொட்டி, அங்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை வல்லுனர்கள், மருத்துவ வல்லுனர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தின்போது இனி வரும் காலங்களில் கொரோனாவின் தாக்கம் என்ன மாதிரியாக இருக்கும், தேர்தலை ஒத்தி வைக்கலாமா என்பது குறித்து பேசப்பட்டது.

இந்த நிலையில் இன்று மதியம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுஷில் சந்திரா செய்தியாளர்களை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தேர்தலை நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டதாக கூறியுள்ளார் .

மேலும் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 24.9 லட்சம் பேர் முதன் முறையாக வாக்களிப்பதற்கு பதிவு செய்துள்ளனர். மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்கள் 8.55 கோடிப்பேர்.

மொத்தம் 690 சட்டமன்ற தொகுதிகள் இந்த 5 மாநிலங்களில் உள்ளன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பெண்களுக்கென தனி பூத்கள் அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம். அந்த வகையில் 1,620 பூத்கள் ஏற்படுத்தப்படும்.

80 வயதுக்கு மேற்பட்டோர், உடல் நன் பாதிக்கப்பட்டோர், கொரோனா தொற்று உடையவர்கள் தபால் ஓட்டை செலுத்தலாம். எல்லா வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரம் ஆகியவை பொருத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டன.

5 மாநிலங்களிலும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாக பிப்ரவரி 10-ம்தேதி முதல் மார்ச் 7-ம்தேதி வரை வாக்குப்பதிவு நடைபெபறும். பஞ்சாப், உத்தராகண்ட், கோவாவில் பிப்ரவரி 14-ம் தேதியும், மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.

 

 

Exit mobile version