Site icon ழகரம்

ரவுடி படப்பை குணாவுக்கு உதவியதாக 3 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்….!

காஞ்சிபுரம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தற்போது தலைமறைவாகியுள்ள குணா மனைவி எல்லம்மாளை கடந்த 9-ம் தேதி கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர்.

இந்தநிலையில், படப்பை குணாவுக்கு உதவி செய்ததாக மூன்று காவல் ஆய்வாளர்கள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, மணிமங்கலம் காவல் ஆய்வாளர் பாலாஜி, ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் ஆகிய 3 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்ய டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார் . இவர்களோடு மேலும் சிலர் ஒட்டுமொத்தமாக 40 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Exit mobile version