Site icon ழகரம்

உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் திருடிய நபர் கைது…!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கலாநிதி மாறன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கி வந்தனர்.

கூட்ட நெரிசலில் திடீரென சேப்பாக்கம் தொகுதி வட்டசெயலாளரான வெங்கடேசன் பாக்கெட்டில் இருந்த 1 லட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் தொப்பி அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெங்கடேசன் அருகிலேயே நீண்ட நேரமாக நின்று நோட்டமிட்டு, உதயநிதி ஸ்டாலின் புறப்படும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி வெங்கடேசனின் பாக்கெட்டில் இருந்த 1 லட்ச ரூபாயை பறித்து செல்வது போன்று காட்சியில் பதிவாகி உள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version