இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்துடன் லட்சுமி மற்றும் விநாயகரின் அச்சடித்தால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில், நமது புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்துடன் விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படத்தை மத்திய அரசு வைக்க வேண்டும், பிரதமரை கேட்டுக்கொள்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் மகாத்மா காந்தியின் புகைப்படமும், மறுபுறம் லட்சுமி தேவி மற்றும் விநாயகர் புகைப்படம் இருக்க வேண்டும் என்றும் அப்படி இருந்தால் முழு நாட்டிற்கும் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
பழைய நாணயத்தை மாற்றவேண்டும் என்று நாங்கள் கூறவில்லை ஆனால் புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் கணபதி மற்றும் லட்சுமி தேவியின் படங்கள் இருக்கலாம், இது ஒரு முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன் இதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தீபாவளி பூஜை செய்யும் போதுதான் தனக்கு இந்த எண்ணம் தோன்றியதாகவும், இந்த எண்ணத்தை எதிர்க்க வேண்டாம், நாட்டின் செழிப்புக்காக இந்த கருத்தைதை எதிர்க்க வேண்டாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.