Site icon ழகரம்

உலகிலேயே பெரிய வாய் கொண்டு கின்னஸ் சாதனை படைத்த பெண்

வாயை வைத்து என்ன செய்ய முடியும் , சாப்பிடலாம் பேசலாம் என நினைத்து கொண்டிருக்கையில், ஒருவர் இந்த வாயை வைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். இவரால் எந்த உணவையும் ஒரே வாயில் சுவைத்து சாப்பிட முடியும். சின்ன வயத்தில் பெரிய கேலி பேச்சுக்கு ஆளான இவர் இன்று அனைவராலும் பாராட்ட படுகிறார்.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்தவர் சமந்தா ரெம்ஸ்டெல். இவர் டிக் டாக்கில் ஏராளமான சாப்பாடு வீடியோக்கள் போட்டு பிரபலமானவர். 31 வயதான சமந்தாவை  1.7மில்லியன்க்கு அதிகமானோர் பாலோ செய்கின்றனர். இவர் அதிகமாக சாப்பாடு வீடியோக்கள் , ஒவ்வொரு வகை உணவை பற்றியும் இவர் ஆயிர கணக்கில் வீடியோக்களை பகிர்ந்து உள்ளார்.

இவரது வீடீயோக்களில் அனைத்து உணவுகளையும் ஒரே வாயில் சாப்பிட்டு விடுவார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இங்கு எல்லாம் ஒரு முழு பானி பூரி கூட ஒரே வாயில் சாப்பிட முடியாமல் இருக்கும் போது  இவர் எப்படி அனைத்து உணவுகளையும் ஒரே வாயில் சாப்பிட்டு ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.. இதற்கு காரணம் இவர் பெரிய வாயை கொண்டு இருப்பதே ஆகும். இவர் ஆப்பிள், சாண்ட்விச் போன்றவற்றை ஒரே வாயில் சாப்பிடும் வீடியோ பலரையும் வியப்பில் ஆழத்தி உள்ளது .

இதனையடுத்து  சமந்தா அவர்கள் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார். சமந்தா வாயின் இடைவெளியின் அகலம் 6.56 செ.மீ, அதாவது 2.56 இன்ச் கொள்ளளவும், உள்ளது மொத்த வாயையும் அளந்தால்  10 செ .மீ.க்கும் அதிகமாக உள்ளது.  உலகின் மிக பெரிய வாய் கொண்ட பெண் இவர் தான் என கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்து இவருக்கு சான்றுதலையும் அளித்து உள்ளது.

இது குறித்து சமந்தா பேசுகையில், எனது வாயை வைத்து என்னால பிரபலமாக முடியும் என ஒரு நாளும் நான் நினைத்தது இல்லை. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய உடல்  பாகம்,மற்றும் தனது திறமைகளை தொடருங்கள். நீங்களும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாம் என அவர் கூறியுள்ளார்.

சின்ன வயத்தில் அனைவரும் கேலி செய்வார்கள் . இப்போது இதை வைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சமந்தாவிற்கு இப்போது சமூக வளத்தத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Exit mobile version