காற்றாலை சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நீங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் தினசரி மின்தேவை சுமார் 14,000 மெகாவாட் மின்சாரமாகும். எனினும்,கோடைகாலத்தில் 16,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கடந்த மாதம் 29-ம் தேதி தினசரி மின்தேவை 17,196 மெகாவாட் அளவை எட்டி சாதனை படைத்தது.
தினசரி மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தனதுசொந்த உற்பத்தி நிலையங்களில் தினமும் 3,700 மெகாவாட் மின்சாரத்தை மின்வாரியம் உற்பத்தி செய்கிறது. எஞ்சிய மின்சாரத்தை மத்திய மின்தொகுப்பில் இருந்தும், தனியார்மின்நிலையங்களிலும் இருந்தும்வாங்குகிறது.
அனல் மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி.வேலி ஆகிய சுரங்கங்களில் இருந்து 40,000 முதல் 50,000 டன் மட்டுமே நிலக்கரி விநியோகம் செய்யப்படுகிறது.