Site icon ழகரம்

பெண்கள் தங்கத்தை நேசிப்பதற்கு இத்தனை காரணங்கள் இருக்கிறதா ?

தங்கத்தை  விரும்பாத பெண்கள் யாரேனும் இருக்க முடியுமா. அணியும் நகைகளில் இருந்து சேமிக்கும் பணம் வரைக்கும் ஒவ்வொரு  நிலையிலும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

தங்கம் மிக சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீடாக பெண்கள் கருதுகிறார்கள். தங்கத்தை ஆபரணங்களாக அணிந்து கொள்வது முதல், அதை தேவையான நேரங்களில் வைத்து பணமாக மாற்றுவது முதல் தங்கம் முக்கிய இடத்தை அடைந்து உள்ளது. பணத்தை பாதுகாக்க பல வழிகள் இருந்தும், அனைவர்க்கும் அணைத்து முதலீடுகள்  பற்றிய தெரிவதில்லை. எடுத்துக்காட்ட பங்கு சந்தைகள் குறித்து அனைவரும் அறிவதில்லை. ஆனால் தங்கத்தை வாங்கி சேமிப்பது, அதை ஆபரணமாக பயன்படுத்துவது முதல், அவசர காலத்தில் அதை அடகு வைத்து பணமாக சேமிப்பது வரை பல்வேறு வகைகளில் இந்த தங்க நகைகள் பயன்படுகிறது.

2005 ஆம் ஆண்டில் இருந்து தங்கம் ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதாவது 2005ல் நீங்க 7000 ரூபாய்க்கு ஒரு பவுன் தங்கம் வாங்கி இருந்தால் இன்றைய அதன் மதிப்பு கிட்டத்தட்ட 47000 ரூபாய் ஆகும். ஒரு 15 ஆண்டுகளில் தங்கம் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. அதனால் இது மிக சிறந்த முதலீடாக பார்க்க படுகிறது.

மோதிரம், செயின், மற்றும் வளையல்,தோடு  என பல்வேறு ஆபரணங்களாக வாங்கி அனைத்து விழாக்களிலும் அதை பயன்படுத்தி, பின்னர் சேமிப்பு பெட்டகங்களுக்கு சென்று விடும். அதனால் அணைத்து நகை கடைகளிலும் சிறு சேமிப்பு திட்டம் அறிமுக படுத்தி உள்ளது.  இந்த சிறு சேமிப்பு ஒவ்வொரு  கடைக்கும் இது மாறுபடும். ஆனால் மாதந்தோறும் சிறு தொகையை சேமித்து பின்னர் தங்கத்தை வாங்கி கொள்கின்றனர்.

மேலும் தங்க நகைகள் குடும்ப அங்கீகாரமாகவும், மிகவும் மதிப்பு மிக்கதாகவும் இருப்பதால், தலை தலைமுறையாக சில நகைகள் குடும்பங்களில் பயன்படுத்த பட்டு வருகிறது. மேலும் துருப்பிடிக்காத இந்த உலோகத்தை எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்து கொள்ளலாம். இப்போது எல்லாம் ஆண்களும் தங்களுக்கு பிடித்த மாடல்களில் நகைகளை வாங்கி கொள்கின்றனர். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி  நகைகள் வாங்கி ஆபரணமாகவும், சேமிப்பாகவும் வைத்து கொள்கின்றனர்.

Exit mobile version