
வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை நீக்கம் செய்துள்ளது. இதனுடன் சேர்த்து கடந்த 6 மாதங்களில் இந்தியர்களின் 1.32 கோடி கணக்குகளை வாட்ஸ் அப் நீக்கம் செய்துள்ளது.
வாட்ஸ் அப் மூலம் பொய் செய்திகள், வெறுப்பு செய்திகள் போன்றவை அதிகளவில் பகிரப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சமூக ஊடகங்களுக்கான புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
குறிப்பிட்ட கணக்கு எப்போது தொடங்கப்பட்டது, அதில் இருந்து எத்தனை மேசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன, எத்தனை பேர் அந்த கணக்கை ரிபோர்ட் அல்லது பிளாக் செய்துள்ளனர் என்பதை கணக்கில்கொண்டு கணக்குகள் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.