தமிழகத்தில் 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியின்றி வெற்றி பெற்றவர்கள் தவிர்த்து 12,602 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டி உள்ளது.
இவர்களை தேர்வு செய்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கியது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 113 வது வார்டு தியாகராய நகரில் அமைந்துள்ள வித்யோதயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வி.கே.சசிகலா தனது வாக்கினை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வி.கே.சசிகலா, ‘இதுவரை அக்காவுடன் (ஜெயலலிதா) சேர்ந்து தான் வாக்கு அளித்து இருக்கிறேன், அதை மனதில் நினைத்துக்கொண்டே வந்தேன். இந்த முறை தான் நான் தனியாக வந்துள்ளேன் என்று கண்ணீர் மல்க கூற்னார்.