.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 46வது வார்டு திமுக சார்பில் விசிக சீட்டு வழங்காததால் அதிருப்தியில் விசிக உறுப்பினர் அகிலாண்டேஸ்வரி டேவிட் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 10 பேரும், குன்றத்தூர் நகராட்சியில் 2பேரும், மாங்காடு நகராட்சியில் 12 பேரும், உத்திரமேரூர் பேரூராட்சியில் 2பேரும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 8 பேரும் என நேற்றுவரை முப்பத்தி நான்கு பேர் வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.