செய்திகள்

நவம்பர் 10ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து “வந்தே பாரத்” தொடர்வண்டி!!

சென்னை-மைசூர் ரயில் முன்னோட்டம் தொடக்கம்...

நவம்பர் 10 ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து “வந்தே பாரத்” தொடர்வண்டி!

  • சென்னை-மைசூர் இடையிலான புதிய வந்தே பாரத் தொடர்வண்டியின் முன்னோட்டம்  “சென்னை சென்ட்ரல் ரயில்” நிலையத்தில் இன்று காலை தொடங்கியது.

நவம்பர் 10 ஆஆம் தேதி முதல் சென்னையிலிருந்து  “வந்தே பாரத்” ரயில்!!

  • நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” தொடர்வண்டி சென்னை ஐ.சி.எப்.உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது.160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த தொடர்வண்டியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பூஜ்யம் கி.மீ.-ல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடும்.
  • பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத் தொடர்வண்டி, புதுடெல்லி-வாரணாசி, புது டெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர்-மும்பை மற்றும் அம்ப் அந்தாரா – புதுடெல்லி என 4 வந்தே பாரத் தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. 

நவம்பர் 10 ஆஆம் தேதி முதல் சென்னையிலிருந்து  “வந்தே பாரத்” ரயில்!!

  • இன்று காலை “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை-பெங்களூரு மற்றும் மைசூர் இடையான முன்னோட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.தென்மண்டல ரயில்வே மேலாளர் மல்லையா இந்த சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். சரியாக காலை 5.50 மணி அளவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி மைசூருக்கு இயக்கப்பட்டது.
  • நவம்பர் 10ம் தேதி முதல் சென்னையிலிருந்து இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வழித்தடத்தின் தொலைவு 483 கி.மீட்டர் ஆகும். இந்த நிதி ஆண்டுக்குள் இருபத்தி ஏழு வந்தே பாரத் தொடர்வண்டி தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நவம்பர் 10 ஆஆம் தேதி முதல் சென்னையிலிருந்து  “வந்தே பாரத்” ரயில்!!

  • இந்த நிலையில் இந்த நிதியாண்டில் மொத்தம் இருபத்தி ஏழு வந்தே பாரத் தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் அதிக வந்தே பாரத் இயக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம் என்றும் படிப்படியாக வந்தே பாரத் தொடர்வண்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வந்தே பாரத் தொடர்வண்டிகள் முழுவதும் குளிரூட்டப்பட்டது என்பதும், பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button