வாழ்க்கைமுறை
அழகை பராமரிக்க எடுத்து கொள்ள உணவுகள் என்ன
சரும அழகை பாதுகாப்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் பிடித்தமான விஷயம்.ஆண்கள் பெண்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சரும கிரீம்கள் பயன்படுத்துவது, பார்லர் சென்று தன்னை அழகுபடுத்தி கொள்ள ஒவ்வொருவரும், தனி நேரம் ஒதுக்கி மெனக்கெடுகின்றனர்.

சரும அழகை பாதுகாப்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் பிடித்தமான விஷயம்.ஆண்கள் பெண்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சரும கிரீம்கள் பயன்படுத்துவது, பார்லர் சென்று தன்னை அழகுபடுத்தி கொள்ள ஒவ்வொருவரும், தனி நேரம் ஒதுக்கி மெனக்கெடுகின்றனர்.
அழகை பராமரிக்க வெளியில் பயன்படுத்தும் கிரீம்கள் உடன் , நாம் எடுத்து கொள்ளும் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக ஆர்கானிக் உணவுகள் எடுத்து கொள்வது அவசியம். ஆர்கானிக் உணவுகள் எடுத்து கொள்வது வேதியல் சேர்ப்பு இல்லாமல் எடுத்து கொள்வது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருகிறது. சரிவிகித உணவை எடுத்து கொள்வது ஹார்மோன் மாற்றங்களை சரி செய்கிறது.
- தினம் பழங்கள் காய்கள் எடுத்து கொள்ள வேண்டும். தினம் பழங்கள் சாப்பிடலாம் அல்லது பழ சாறு எடுத்து கொள்ளலாம். பச்சை காய்கறிகள் சாலட், சூப் என எப்படி வேண்டுமானாலும் காய்கள் எடுத்து கொள்ளலாம். அன்றாட உணவில் அணைத்து காய்களும் பழங்களும் எடுத்து கொள்வது, உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறவும், தேவையான ஊட்டச்சத்துகள் உடலுக்கு கிடைக்கும். ஆர்கானிக் காய்கள், பழங்கள் எடுத்து கொள்ளுங்கள்.
- ஒரு நாளைக்கு போதுமான 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறவும், இரத்த ஓட்டம் சீராகவும் இது உதவும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், அதே போல் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் வெளிப்புறம் அழகு கூடுதலாக தெரியும்.
- தினம் ஒரு பழசாறு எடுத்து கொள்வது சரும புத்துணர்ச்சிக்கு உதவும். சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை அனைத்தும் பழங்களில் இருந்து கிடைக்கிறது. அதனால் தினம் பழமோ, ஜூஸ் எடுத்து கொள்ளுங்கள்.
- வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்றவை அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் .
- மேலும் அதிக கொழுப்பு சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணையில் பொறித்த வறுத்த உணவுகள், குளிர்ச்சியான உணவுகள், மற்றும் பாக்கெட்களில் அடைக்க பட்ட உணவுகள் அனைத்தையும் தவிர்த்திடுங்கள். இவை அனைத்தும் சரும பொலிவை குறைக்கும். இந்த உணவுகள் ஊட்டச்சத்து குறைந்த அதிக கலோரி உணவுகள். இதை எடுத்து கொள்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் அழகையும் கெடுக்கும்.