Site icon ழகரம்

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.130 கோடி மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டல்….!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (22.1.2022) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம், கழனிவாசல் திட்டப்பகுதியில் 130 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 900 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளுக்குக் காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

11 ஏக்கர் நிலத்தில் 900 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. தரை மற்றும் மூன்று தளங்களுடன் ஒவ்வொரு குடியிருப்பும் 411 சதுர அடி கட்டுமானப் பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை. கழிவறை ஆகியவற்றுடன் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான குடிநீர் வசதி, மின்சாரம் போன்ற வசதிகளுடனும் கட்டப்படும்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Exit mobile version