பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் புதிதாக தான் கட்டியுள்ள வீட்டிற்கு சமீபத்தில் குடியேறி உள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, இயக்குநர் ராம், மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் மாரி செல்வராஜின் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் வாழ்த்தி உள்ளனர்.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாரி செல்வராஜின் புதிய வீட்டுக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜின் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி புகைப்படங்களும், மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.