கரூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வட மாநில பத்திரிக்கை சர்வே ஒன்று இந்தியாவில் முதன்மையான முதல்வர் ஸ்டாலின் என்று கூறியுள்ளது. இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு தமிழக முதல்வர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்று கூறிய உதயநிதி, நீட் தேர்வை ரத்து செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.
ஆளுநர் தற்போது நடைபெறுவது அடிமை அதிமுக ஆட்சி கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சி என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.