திமுக இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உதநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெருமையும், கடமையும் நிறைந்த திமுக இளைஞர் செயலாளராக மூன்றாண்டுகளை நிறைவு செய்து, இன்று 4-ம் ஆண்டு பயணத்தை தொடங்குகிறேன். நம்பிக்கை வைத்து பெரும் பொறுப்பை வழங்கிய நம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுகன், உள்ளிட்ட தலைமை, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றி.
உடன் உழைக்கும் இளைஞரணியினர், உடன்பிறப்புகள், செல்லும் திசையெங்கும் தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து என்னிடம் அன்பு பாராட்டும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். சமூக நீதியை நிலைநிறுத்த, கழகத்தை வளர்த்தெடுக்க பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் வழியில் தொடர்ந்து உழைத்திடுவோம்!” என்று உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.