மூத்த வீடியோ கிராஃபரான பெய்ரி சாக்ர்ஷிவ்ஸ்கி (55), ஃபாக்ஸ் நியூசில் பணிபுந்து வந்த பெண் நிருபரான ஒலெக்சான்ட்ரா சாஷா குவ்ஷினோவா (24) ஆகிய இருவரும் உக்ரைன் போரில் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர். இவர்களுடன் பயணம் செய்த மற்றொரு பத்திரிக்கையாளரான பெஞ்சமின் ஹால் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கீவ் நகரில் இருந்து வெளியேறி வரும்போது அவர்களின் வாகனம் தீயில் சிக்கியது.
இருவரின் மரணத்தையும் உறுதிப்பாடுத்தியுள்ள ஃபாக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சூசன்னா ஸ்காட்,” ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் செய்திகளை தருவதற்காக உயிரைப் பணயம் வைக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இன்று ஒரு மோசமான நாள்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மூத்த ஆவணப்பட வீடியோகிராபர் ப்ரென்ட் ரெனாட், கீவ் நகருக்கு வெளியே உள்ள இர்பின் பகுதியில் போர் குறித்து படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது, ரஷ்ய படைகள் நடத்திய நேரடித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக குறுகிய இடைவெளியில் மூன்று பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டிருப்பது, உக்ரைனில் நடக்கும் போரினையும், அதனால் மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களையும் உறையவைக்கிறது .