Site icon ழகரம்

ட்ரெண்டான ‘BoycottHyundai’ ஹேஷ்டாக் ; விளக்கமளித்த ஹூண்டாய் இந்தியா நிறுவனம்….!

இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக திகழும் தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத்திற்கான ஆதரவு தரும் விதமாக பாகிஸ்தானில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5ம் தேதி ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதியன்று, ஹூண்டாய் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில், “காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்கள் தொடர்ந்து வரும் சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட ஹூண்டாய் நிறுவன கார்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டுமென கோரி #BoycottHyundai என்ற ஹேஷ்டேக் சர்வதேச அளவில் ட்ரெண்டாகி தற்போது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ஹூண்டாய் நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என கண்டனக் குரல்கள் வலுத்த நிலையில், தற்போது அந்நிறுவனம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய சந்தையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் இருப்பதாகவும், தேசியத்தை மதிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாம் வீடு இந்தியா என்றும், உணர்வுகளை மதிக்காத கருத்துகள் வெளியிடப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

Exit mobile version