Site icon ழகரம்

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக உள்துறை செயலாளர் பனிந்தீர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவு:

“லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார்.

சென்னை அமல்படுத்துதல் பிரிவு ஐஜி துரை குமார், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமிக்கப்படுகிறார்.

கட்டாய காத்திருப்புப் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே, புதுக்கோட்டை எஸ்.பி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version