Site icon ழகரம்

பிரபல ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவுக்கு 4-வது இடம்

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஃபோர்ப்ஸ் ஆசியா வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான 200 சிறந்த நடுத்தர நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 24 நிறுவனங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து அந்தப் பட்டியலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2021-ல் இந்தப் பட்டியலில் இந்தியா 26-வது இடத்தில் இருந்தது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக 22 நிறுவனங்களுடன் சீனா 5-வது இடத்தில் உள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்திய நடுத்தர நிறுவனங்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் தைவான் அதிகபட்ச அளவாக 30 நிறுவனங்களை உள்ளடக்கி தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. ஜப்பான் 29 நிறுவனங்களுடன் 2-வது இடத்திலும், தென் கொரியா 27 நிறுவனங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரையில், ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டாலர் இண்டஸ்ட்ரீஸ் கரோனா பாதிப்பிலிருந்து வேகமாக மீண்டு கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2021-22-ம் நிதியாண்டில் 30 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன் அதன் நிகர லாபம் 72 சதவீதம் அதிகரித் துள்ளது. இவ்வாறு அந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version