Site icon ழகரம்

உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணம் – போராட்டத்திற்கு தயாராகும் பஞ்சாப் விவசாயிகள்

ப்ரல் 1ஆம் தேதி முதல், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த பஞ்சாப் மாநில விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இது குறித்து, விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் மூத்த தலைவர் ஹரிந்தர் சிங் லகோவால் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசியுள்ளார்.

அப்போது, “விரைவில் பல்வேறு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆகவே, சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் கீழ் உள்ள விவசாயிகள் சங்கங்கள் விரைவில் ஒரு கூட்டத்தை நடத்தி அடுத்த போராட்டங்கள் குறித்து முடிவெடுக்கும். ஏற்கனவே, பொதுமக்கள் பணவீக்கத்தின் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இருக்க, சுங்கச்சாவடி கட்டண உயர்வை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு மூத்த தலைவரான டாக்டர். தர்ஷன் பால் பேசுகையில், “இது குறித்து விவாதிக்க நாங்கள் விரைவில் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளோம். இந்த கட்டண உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், எரிபொருட்களின் விலைகளும் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன” என்று கூறியுள்ளார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சுங்கச்சாவடிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல், 10 விழுக்காடு தொடங்கி 18 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

Exit mobile version