Site icon ழகரம்

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு முடிவு…..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி,கொங்குநாடு கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. பாஜக, அதிமுக கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Exit mobile version