குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 27ம் தேதி முதல் 29ம் தேதிவரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும். இதன்பிறகு முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.