Site icon ழகரம்

சின்னம் சிறியதாக இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையல், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாம் தமிழர் கட்சியினர் ‘கரும்பு விவசாயி ’ சின்னத்தில் போட்டியிடுகின்றனர். திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சி சின்னம் சிறிதாக அச்சிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டதால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர். பின்னர், அவர்கள் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடியை நேரில் சந்தித்து இது தொடர்பான புகார் மனுவை அளித்தனர்.

 

Exit mobile version