தடுப்பூசியே இதுவரை செலுத்திக் கொள்ளாதவர்கள், தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கடந்த பின்னரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்குமே பாதிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் 68 விழுக்காடும், ஒரே ஒரு தடுப்பூசி செலுத்தியவர்கள் 12 விழுக்காடு என மொத்தம் 80 விழுக்காடு தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்கள் பாதிக்ப்படுகின்றனர். அதே போன்று இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் முடிந்தும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளாதவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது என மருத்துவ வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் கூறப்படுகிறது.
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தற்போது 227 ஆக்சிஜன் ஜெனரேட்டரும், 17 ஆயிரத்து 600 கான்சென்டிரேட்டர்கள் திரவ மருத்துவ ஆக்சிஜனுடன் தயார் நிலையில் உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை பாதிப்பு எண்ணிக்கை உயரத்தொடங்கி சற்று குறையத் தொடங்கியுள்ளது.ஆனாலும் இதனை வெற்றியாகக் கருதாமல், இந்த நேரத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கடந்த ஜனவரி 15-ஆம் தேதி சென்னையில் 8,978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது நூறில் 30 விழுக்காடு. இந்த எண்ணிக்கை தற்போது 23.6 விழுக்காடு என குறைந்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார் .