ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து தேர்வை புறக்கணித்த முஸ்லிம் மாணவிகளுக்கு மறுதேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்படாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் கல்வி நிலை யங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து உடுப்பியில் 6 கல்லூரி மாணவிகள் கடந்த ஜனவரியில் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற பருவத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வையும் புறக்கணித்தனர்.
மேலும், ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றமும் தடை விதித்தது. ஹிஜாப் அணிந்து வகுப்பறைக் குள் செல்ல அனுமதிக்காததால் முஸ்லிம் மாணவிகள் பலர் தேர்வை புறக்கணித்தனர். அவர் கள் தற்போது மறுதேர்வுக்கு அனு மதிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
30 மதிப்பெண் இழப்பு?
இதுகுறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகை யில், ‘‘முஸ்லிம் மாணவிகள் கர்நாடக அரசின் உத்தரவையும், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்கவில்லை. எனவே அவர்களுக்கு மறுதேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது” என தெரிவித்தார். இதனால் முஸ்லிம் மாணவிகள் செய்முறை தேர்வுக்கான மதிப் பெண்களை (அதிகபட்சம் 30) இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.