Site icon ழகரம்

நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின்.வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை….!

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மன்னார்குடி வீட்டில் கொள்ளை நிகழ்ந்துள்ளது.

டிஆர் பாலுவின் வீடு தளிகோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வீட்டில் இல்லாததால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதேபோல அவரது வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு வீடும் பூட்டப்பட்டு இருந்துள்ளது. டி.ஆர்.பாலுவின் வீட்டின் அருகே உள்ள வீட்டின் கதவின் பூட்டை உடைத்து முதலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர் டி.ஆர்.பாலுவின் வீட்டிற்குள் பூட்டை உடைத்து நுழைந்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனைக் கொண்டும் கொள்ளையர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Exit mobile version