Site icon ழகரம்

மேகதாது விவகாரம் | கர்நாடக அரசின் நடவடிக்கையை எந்த நிலையிலும் தமிழக அரசு தடுக்கும்: முதல்வர் ஸ்டாலின்

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை எந்த நிலையிலும் தமிழக அரசு தடுக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரைவயில் இன்று (மார்ச் 21) தனித் தீர்மானம் ஒன்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனால் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி ஆதரவுடன், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “மேகதாது விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கையை திமுக அரசு எடுக்கும். எந்த நிலையிலும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழக அரசு தடுக்கும். மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, உழவர் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும். மேகதாது விவகாரத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வெல்வோம்” என்று தெரிவித்தார்.

Exit mobile version