தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திரு இருதய மேல்நிலை பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்தாக கூறப்படும் வீடியோ உண்மையானது தானா என்பது குறித்து தடயவியல் பரிசோதனையில் உறுதிப்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.
அதன்படி, இன்று காலை வல்லம் டி.எஸ்.பி. பிருந்தா முன்பு, மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா, அரியலூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் உறுப்பினர் முத்துவேல் ஆகியோர் ஆஜராகினர். பின்னர் மாணவியின் தந்தை முருகானந்திடமும், சித்தி சரண்யாவிடமும் தனித்தனியாக டிஎஸ்பி பிருந்தா விசாரணை மேற்கொண்டார். வீடியோ எடுத்த செல்போனை விஷ்வ இந்து பரிஷத் உறுப்பினர் முத்துவேல் அளித்தார்.