தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடக்கவுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர், 8,288 பேரூராட்சி உறுப்பினர், 3,468 நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு காலை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் மாலை 5 மணிக்கு மேல் கொரோனா தொற்று உள்ளவர்கள் வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ம் தேதி தொடங்குகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மனுதாக்கலுக்கான கடைசி பிப்ரவரி 4-ம் தேதி என்றும் கூறப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை பரிசீலனை பிப்ரவரி 5ம் தேதி அன்றும், வேட்புமனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 7-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடக்கவுள்ளது. அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு மார்ச் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மார்ச் 2ம் தேதி பதவியேற்பார். தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தற்போது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.