கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது: தற்போது நாம் மரபுகளை மீட்டெடுக்கும் சூழலில் உள்ளோம். பாரம்பரிய உணவில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மொழியை கொண்டாடுவதில் தமிழர்கள் என்றுமே பெருமை வாய்ந்தவர்கள்.
மொழி அவசியம் என்பதைத் தாண்டி மொழி அரசியலை செய்து கொண்டிருக்காமல் தாய் மொழியை வேகமாக கற்றுக்கொள்ள வேண்டும்.
என்னை விமர்சனம் செய்யும் பாதி பேருக்கு தமிழில் பெயரில்லை. அவர்களால் தமிழில் பேச முடியாது, பிழை இல்லாமல் எழுத முடியாது. தமிழ் எனக்கு உயிர், புதிய கல்வி கொள்கை கூறுவது இன்னொரு மொழியை கற்றுக்கொள்வது, அது ஆங்கிலமாகவோ மற்ற மொழியாகவோ இருக்கலாம். இதை சொன்ன உடன் பாய்ந்து வருகின்றனர். தமிழை சரியாக உச்சரிக்க, விவாதத்துக்கு நான் தயார். இணையத்தில் தவறாக தாக்குதல் நடத்தாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.