தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தர்விட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசுத் தின நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏன் மரியாதை செலுத்தவில்லை என்று சிலர் அவர்களை கேட்டுள்ளனர். அதற்கு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கள் எழுந்து நிற்கவேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் கூறியிருப்பதாக அவர்கள் பதிலளித்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்கவேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதனை மீறும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ சமூக ஊடகத்திலும் பரவலாக பகிரப்பட்டது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக தமிழக அரசு மீண்டும் புதிய ஆணையை வெளியிட்டுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது கட்டாயம் எழுந்து நிற்கவேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து இசைவட்டுக்களைக் கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பட்டாக பாடப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.