ஒமைக்ரான் குறித்த புதிய எச்சரிக்கை பதிவை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கொரோனா, பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மீண்டு வந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி மீண்டும் பொது முடக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தை உருவாக்கியுள்ளது.
கொரோனாவின் மற்ற வேரியண்ட்டுகள் உடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று பல்வேறு மருத்துவ வல்லுனர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : ’ஓமைக்ரான் வைரஸை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது உயிர்களை கொல்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 71 சதவீதம் அளவுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனவே மக்கள் சுய கட்டுப்பாடுடன் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதனை செய்தால் மட்டுமே, நாம் இந்த பெருந்தொற்றில் இருந்து விடுபட முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.