திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே பலருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் கூட்டம் அதிகம் உள்ளது.
புதுவிதமான இந்த காய்ச்சலால் தொண்டையில் வலி, ஜலதோஷம் மற்றும் அதிகப்படியான மூட்டு வலி ஏற்படுகிறது. ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் மற்றவர்களுக்கும் காய்ச்சல் பரவுகிறது. காய்ச்சல் தணிந்தாலும், 3 நாட்களுக்கு குறையாமல் மூட்டு வலியும், உடல் அசதியும் இருக்கிறது. சிலருக்கு வாந்தியும் ஏற்படுகிறது.
இக்காய்ச்சல் வேகமாகப் பரவுவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. காய்ச்சலை மட்டுப்படுத்த பாரசிட்டமால் மாத்திரை மற்றும் சளி மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.