தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி சர்வதேச அளவில் சிலம்பாட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்!
- சென்னை மாநிலக் கல்லூரியில் தற்போது முதுகலை முதலாம் ஆண்டு பொது நிர்வாகவியல் பயிலும் காயத்ரி என்ற மாணவி, நேபாளில் சர்வதேச அளவில் நடைபெற்ற இன்டர்நேஷனல் சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு இந்திய நாட்டுக்கு தங்கப்பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் சின்னகலக்கட்டூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் திரு கார்த்திகேயன், திருமதி பவானி அவர்களின் மூத்த மகள் ஆவார்.
- மேலும், பரிசு பெற்று திரும்பி வந்த மாணவியை பாராட்டும் மற்றும் வரவேற்கும் விதமாக ஊர் பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.