தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று குறைந்துகொண்டு வருவதாகவும் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 90 லட்சம் பேர் 2 வது டோஸ் தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் .
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக படுக்கை வசதிகள் உள்ளது. 9 ஆயிரத்துக்கும் குறைவாகவே படுக்கைகள் நிரம்பியுள்ளது. தேவையான அளவு ஆக்ஜிசன் மற்றும் மருந்துகள் கையிருப்பு உள்ளது.அரசு மருத்துவமனைகளில் ஓ.பி. நேரம் அதிகரிப்பது தொடர்பாக மருத்துவமனை முதல்வர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.