தமிழ்நாடு
வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திருநங்கை கங்கா வெற்றி
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37வது வார்டில், திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.49 வயதான கங்கா, கடந்த 2002 முதல் திமுக உறுப்பினராக இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.