உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதலின் எதிரொலியாக சன்பிளவர், பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய் ( ரீஃபைண்ட் ஆயில் ) 70 சதவிகிதம் உக்ரைனில் இருந்தும் 20 சதவிகிதம் ரஷ்யாவிலிருந்தும் தான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் ரீபைண்ட் ஆயில், பாமாயில், கடலெண்ணெய் போன்றவைகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் கடந்த வாரம் நல்லெண்ணெய் கிலோ ரூ 230-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ 50 உயர்ந்து ரூ 280க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் கடலை எண்ணெய் கிலோ ரூ 150 விற்ற நிலையில் தற்போது ரூ 20 உயர்ந்து ரூ170க்கு விற்பனையாகிறது.