Site icon ழகரம்

“அரசின் முடிவு வரவேற்கத்தக்கது… மழலையர் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையைத் தொடங்குவீர்” – அன்புமணி

தமிழகத்தில் மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்குவதுடன் போதிய ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படாது என்றும், தொடர்ந்து செயல்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருக்கிறார். மாணவர் நலன் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தவிர்க்க முடியாதவை. அதனால்தான் அந்த வகுப்புகள் மூடப்பட்டதை பாமக கடுமையாக எதிர்த்தது. பாமக-வின் வலியுறுத்தலுக்குப் பிறகு மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!

கல்வி சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் நிலையில் தன்னிச்சையாக முடிவெடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்; வல்லுநர்களின் கலந்தாய்வுக்குப் பிறகு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்குவதுடன் போதிய ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்!” என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 

Exit mobile version