முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் தொடர்புடையவர்களின் நிறுவனங்களின் 110 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகளை முடக்கி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.பி. வேலுமணி. அமைச்சராக இருந்தபோது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அரசு டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த விசாரணையில், கே.சி.பி. இன்ப்ரா மற்றும் ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட் நிறுவனங்களின் 110 கோடி ரூபாய் மதிப்பிலான நிரந்தர வைப்பீடுகளை முடக்க கோரி, சிறப்பு நீதிமன்றத்த லஞ்ச ஒழிப்பு துறை மனுத்தாக்கல் செய்தது.