Site icon ழகரம்

‘அதிமுக-வில் தலைமையே கிடையாது’ : செல்லூர் ராஜூ

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர் சந்தித்தவர், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண பலம், கூட்டணி பலம், அதிகார பலம் தான் திமுக வென்றதற்கு காரணம்.

அதிமுக-வில் தலைமையே கிடையாது. இப்போது இருப்பவர்களை, கட்சியை வழிநடத்த நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம்.

அதிமுக வாக்கு வங்கி குறையவில்லை. வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை.

பாஜக மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்வதற்கு காரணம், அது எப்போதும் வளரும் கட்சி தான், அவர்கள் அப்படி தான் சொல்வார்கள்.தமிழகத்தில் என்றுமே திமுக, அதிமுக தான் ஆட்சி செய்யும். மாற்று கட்சியினர் யாராலும் ஆள முடியாது.” என்றார்.

Exit mobile version