“சாதியை’’ பெயருக்குப் பின்னால் “பெருமையாகப் போட்டுக்கொள்’’ என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசினாரா…??
- நாம் தமிழர் கட்சியின் தலைமையில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி மாபெரும் பொதுக்கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் நேற்று நடைபெற்றது.
- எது உண்மையான சமூக நீதி? என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிறைவு உரையாற்றினார்.
- அந்த கூட்டத்தில் சீமான் பேசிய போது, “பெயருக்குப் பின்னால் சாதியின் பெயர் சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் யார் என்று கேட்டால் கோன் (கோனார்) என்று சொல்! பெருமையாக சொல் இல்லையென்றால் “ஆயர்” என்று சொல் இவ்வாறாக பேசினார்.
- யாதவர்கள் என்று தங்களின் சாதியை அடையாளப்படுத்தினால் தெலுங்கு யாதவர்களும் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை கல்வி ரீதியாக, அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்கின்றனர். இதை தடுக்கும் விதமாக யாதவர் என்று பயன்படுத்தாமல் “கோனார் அல்லது ஆயர்’’ என்று பெயருக்கு பின் பயன்படுத்துமாறு சீமான் பேசியுள்ளார்.
- தமிழர்களும் பிற மொழியினரும் வெவ்வேறு! அவர்களும் நீங்களும் ஒன்றல்ல! தமிழ்நாட்டில் இருக்கும் கோனார்களும், பீகாரில் இருக்கும் யாதவர்களும் ஒன்றல்ல… இதனை அடையாளம் காண தமிழர்கள் தங்களின் சாதியை கோனார் என்று பயன்படுத்த வேண்டும் என்ற தொனியில் பேசிய சீமானின் பேச்சு! சாதியை பெருமையாக பேசலாம்! பெயருக்கு பின்னால் சாதியை போட்டுக்கொள்ளுங்கள் என்று சீமான் பேசியதாக தவறாக புரிந்துக்கொண்டு சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
User Rating:
3.06
( 4 votes)
Back to top button