செய்திகள்
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு எடப்பாடி அழைத்தார்! ஸ்டாலின் என்னை அழைப்பதில்லை!! -சீமான்
10% இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மாநிலஅரசு, அரசு பணிகளில் தனியார் நிறுவனங்கள் மூலம்...
சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்த பின்பு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இளங்கோ குமரவேல் நடிப்பில் உருவாகியுள்ள ‘காரோட்டியின் காதலி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த பின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 100 நாள் வேலை திட்டத்தால் வேளாண்மை எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த படம் சொல்லியுள்ளது. உழைப்பில் இருந்து மக்களை வெளியேற்றுவது பேராபத்தானது என தெரிவித்தார்.
- அரசு பணிகளில் தனியார் நிறுவனங்களைக் கொண்டு ஆட்களை சேர்க்கும் நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் எதிர்த்துள்ளது குறித்த கேள்விக்கு, தமிழக அரசின் இந்த நடவடிக்கை மக்களை உறுதியாக பாதிக்கும். தனியார் தனியார் என அனைத்து துறைக்கும் ஒப்பந்த அடிப்படையில் தான் வேலைக்கு ஆள் எடுக்கப்படுகிறது. 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மாநில அரசு, அரசு பணிகளில் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைக்கு ஆள் எடுக்க முயற்சி செய்வது, இரட்டை நிலைப்பாடாக இருப்பதாக அவர் விமர்சித்தார். இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்த சீமான், அனைத்து மக்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்பதில் தமக்கு உடன்பாடு இருப்பதாகவும் ஆனால் முன்னேறி வகுப்பினருக்கு எதற்கு இட ஒதுக்கீடு எனவும் கேள்வி எழுப்பினார்.
- வகுப்பும் சாதியும் எப்படி முன்னேறும் எனவும் கேள்வி எழுப்பினார். எந்த சாதியை வைத்து கல்வி வேலைவாய்ப்பு அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டதோ அதே சாதியை வைத்து அந்த வாய்ப்புகளை வழங்குவதே இட ஒதுக்கீடு என விளக்கம் அளித்தார். சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்த பின், அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.
- 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு சார்பில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த ஆட்சியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால், மு.க. ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு அனைத்து கட்சி கூட்டங்களுக்கு தம்மை அழைப்பதில்லை எனவும் கூறினார்.